search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராசக்தி கோவில்"

    ராமநாதபுரம் அருகே பிரசித்து பெற்ற பேராவூர் பராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    பேராவூர் பராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந்தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.

    மாலையில் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் இரவு பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், இரண்டாவது நாள் காலை 7:30 மணிக்கு கோ பூஜை, சூரிய நமஸ்காரம், மாலையில் மூன்றாம் கால வேத பராயணம், ஹோமம் நடைபெற்றது.

    நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், வேத பாராயணம், நாடி சந்தானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9:30 மணிக்கு மேல் கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து தீபாரா தனை, மூலவர் அபிஷேகம், அலங்காரம் தீபாரா தனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இரவு தெம்மாங்கு கலை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை தலைவர் மணி, துணைத் தலைவர் பூமிநாதன் மற்றும் விழாக்கமிட்டியினர் பொது மக்கள் செய்திருந்தனர்.
    ×